பயணிகளின் கோரிக்கையை ஏற்று கலிப்சோ ரயிலை நானுஓயா வரை இயக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்னதாக கலிப்சோ ரயில் பதுளை ரயில் நிலையத்தில் இருந்து பண்டாரவளை ரயில் நிலையம் வரை தினமும் இயக்கப்பட்டு வந்தது.
இதன்படி ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி முதல் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் பதுளையில் இருந்து நானுஓயா வரை ரயில் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே முகாமைத்துவப் பணிப்பாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.
சுற்றுலாப் பயணிகளுக்கு காட்சிகளைக் காண வாய்ப்பளிக்கும் வகையில், தெம்மோதர அருகே 10 நிமிடங்களும், எல்ல 9 வளைவுப் பாலத்தில் 10 நிமிடங்களும் கலிப்சோ ரயில் நிறுத்தப்படும்.