கமல்ஹாசன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் கமல்ஹாசன். இவர் இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் கலக்கி கொண்டு வருகிறார்.
இவர் 1959-ம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர்.
இவர் வில்லனாக நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் கல்கி 2898 ஏடி. பிரபாஸ் ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தை பிரபல இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கியிருந்தார். மேலும் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
கல்கி 2898 ஏடி
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 1,100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
அதை தொடர்ந்து, தற்போது கல்கி படத்தின் படக்குழு உறுப்பினர் வேணுகோபால் அந்த படத்தை பற்றி ஒரு தகவலை கூறியிருக்கிறார்.
அது பற்றி அவர் கூறுகையில், “இந்த படத்தில் அஸ்வத்தாமனாக நடிக்க அமிதாப் பச்சன் மற்றும் கர்ணனாக பிரபாஸ் நடிப்பார்கள் என்பது ஆரம்பத்திலேயே முடிவெடுக்கப்பட்டது. ஆனால் யாஸ்கின் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்பது தான் நிச்சயமற்று இருந்தது.
அப்போது இந்த கதாபாத்திரத்திற்கு மோகன்லால் சார் பரிசீலிக்கப்பட்டார், ஆனால் அவரை விட யாஸ்கின் கதாபாத்திரத்திற்கு கமல் சார் தான் பொருத்தமாக இருப்பார் என முடிவு செய்யப்பட்டது” என்று வெளிப்படையாக கூறினார்.