கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டவர்க்ளிகள் உயிரிழந்து இருப்பதற்கு அரசின் அலட்சியம் தான் காரணம் என நடிகர் விஜய் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நேரில் சென்ற விஜய்
கள்ளசாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்க நடிகர் விஜய் நேரில் சென்று இருக்கிறார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி இருக்கிறார். அதன் வீடியோ வெளியாகி இருக்கிறது. இதோ..
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிட இருக்கிறார். அதனால் தற்போதே முழு அரசியலில் அவர் கவனம் செலுத்த தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.