சிறகடிக்க ஆசை
விஜய் டிவியின் டிஆர்பியை தூக்கி நிறுத்தி வருகிறது சிறகடிக்க ஆசை சீரியல்.
எல்லா தொடர்களிலும் வருவது போல வில்லி, வில்லன், அவர்களால் நாயகன்-நாயகி குடும்பத்தில் பிரச்சனை அதையே கதையாக இல்லாமல் குடும்ப பாங்கான கதைக்களத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் இது.
அண்ணாமலை என்ற நேர்மையான மனிதனின் 3 மகன்களை சுற்றியே கதை நகர்ந்து வருகிறது.
நாளைய புரொமோ
கடைசி எபிசோடில் மீனாவை வீட்டில் காணவில்லை என்பதால் எல்லா இடத்திற்கும் சென்று முத்து அவரை தேடுகிறார்.
இதற்கு நடுவில் விஜயா, மனோஜ், ரோஹினி அவர் ஏதாவது செய்திருப்பாரா, அவரது அப்பா போல ரயிலில் சிக்கியிருப்பாரா என்றெல்லாம் பேசுகிறார்கள்.
தற்போது நாளைய எபிசோட் புரொமோவில் மீனா வீட்டில் இருப்பதை கண்ட முத்து அவரை கட்டியணைத்து அழுகிறார். இதோ சிறகடிக்க ஆசை நாளைய எமோஷ்னல் புரொமோ,