சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று சிறகடிக்க ஆசை சீரியல்.
குடும்பங்கள் கொண்டாடும் தொடராக ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் நடிக்கும் அனைத்து நடிகர்களுக்கும் மக்களிடம் நல்ல ரீச் கிடைத்துள்ளது.
முத்து, மீனா மிகவும் பிரபலமாகிவிட்டார்கள், அவர்கள் ஜோடியாகவும் பல தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்கள்.
அண்மையில் கூட வெற்றி வசந்த் மற்றும் கோமதி ஒரு உணவகத்திற்கு ரசிகர்களுடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளார்கள், அந்த வீடியோக்கள் கூட வெளியாகி இருந்தது.
நாளைய புரொமோ
தற்போது கதையில் முத்து சொன்ன வார்த்தையால் மனம் உடைந்துபோன மீனா வீட்டைவிட்டு எங்கேயோ சென்றுவிட்டார். முத்து எல்லா இடத்திலும் அவரை தேடிக்கொண்டு இருக்கிறார்.
இந்த நிலையில் மனோஜ், மீனா ஏதாவது கடிதம் எழுதிவிட்டு சென்றாரா பார்த்தீர்களா, அதில் மாமியார் கொடுமை என ஏதாவது எழுதி வைத்துவிட்டு தவறாக செய்துகொள்ள போகிறார் என கூறுகிறார்.
இதனால் விஜயா ஏன் இப்படியெல்லாம் பயமுறுத்துகிறார் என ஷாக் ஆகிறார்.