நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார். மற்ற ஹீரோ படங்களில் நடிப்பது மட்டுமின்றி வுமன் சென்ட்ரிக் படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.
ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா போன்ற பல படங்கள் அவர் கைவசம் இருக்கிறது. மேலும் பாலிவுட்டில் பேபி ஜான் என்ற படத்தில் கீர்த்தி ஹீரோயினாக நடித்து வருகிறார். தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் தான் அந்த படம்.
கிரிக்கெட் + ரகளை
தற்போது கீர்த்தி சுரேஷ் தனது குடும்பத்துடன் கிரிக்கெட் விளையாடி இருக்கும் வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்.
மற்றவர்களை நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டு கீர்த்தி சுரேஷ் செய்திருக்கும் ரகளையை வீடியோவில் பாருங்க.