நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் தடம் பதிக்க தொடங்கிவிட்டார். கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் அறிமுகம் ஆன பேபி ஜான் படத்தை அட்லீ தான் தயாரித்து இருந்தார். ஆனால் அந்த படத்திற்கு மோசமான வரவேற்ப்பு தான் கிடைத்தது. அதனால் படம் பிளாப் ஆகி பெரிய நஷ்டம் அடைந்தது.
கீர்த்தி சுரேஷ் அடுத்து அக்கா என்ற வெப் சீரிஸில் நடித்து இருக்கிறார். அது மட்டுமின்றி சில தமிழ் படங்களிலும் நடித்து முடித்திருக்கிறார்.
ரன்பீர் கபூர் ஜோடி
இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷுக்கு மீண்டும் ஹிந்தி பட வாய்ப்பு வந்திருக்கிறது. அவர் ரன்பீர் கபூர் ஜோடியாக அடுத்து ஒரு படத்தில் நடிக்க போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த படமாவது கீர்த்தி சுரேஷின் பாலிவுட் கெரியரில் திருப்பு முனையை ஏற்படுத்துமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.