நடிகர் நாகர்ஜுனா சமீபத்தில் ஏர்போர்ட் வந்தபோது அவருக்கு பாதுகாப்பாக வந்த பவுன்சர்கள் மாற்றுத்திறனாளி நபர் ஒருவரை தள்ளிவிட்ட வீடியோ வெளியாகி பெரிய சர்ச்சை ஆனது.
நாகர்ஜுனா அருகில் வந்த அந்த நபரை இழுத்து கீழே தள்ளிவிட்டார் காவலர். அதை பார்த்தும் பார்க்காதது போல நாகர்ஜூனா, தனுஷ் தொடர்ந்து நடந்து சென்றனர்.
சர்ச்சையை தொடர்ந்து நாகர்ஜுனா மன்னிப்பு கேட்டு ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
சந்திப்பு
இந்நிலையில் மீண்டும் ஏர்போர்ட் வந்தபோது நாகர்ஜூனா அந்த நபரை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார்.
அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி இருக்கிறது.
That’s Not your Fault – Nagarjuna 😍#nagarjuna pic.twitter.com/IcTQWLn2w3
— Viral Bhayani (@viralbhayani77) June 26, 2024