Sunday, December 22, 2024
Homeசினிமாகுக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியால் குரேஷிக்கு வந்த மிரட்டல்கள்.. கடைசியில் என்ன ஆனது?

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியால் குரேஷிக்கு வந்த மிரட்டல்கள்.. கடைசியில் என்ன ஆனது?


குக் வித் கோமாளி 5

குக் வித் கோமாளி 5, விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக உள்ளது.

தற்போது 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது, கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

சமையல் ப்ளஸ் கலாட்டா என்ற கான்செப்டில் உருவான இந்த நிகழ்ச்சி பல மொழிகளிலும் தொடங்கப்பட்டுள்ளது.


குரேஷி ஓபன் டாக்


இந்த குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருப்பவர் குரேஷி. இவர் செய்யும் காமெடிகளையும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

அண்மையில் இவர் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி குறித்தும் தனது பயணம் பற்றியும் பேசியுள்ளார்.

ஏதாவது வந்த கமெண்ட் பார்த்து பயங்கரமாக சிரித்தது உள்ளதா என கேட்டுள்ளனர். அதற்கு அவர், குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் ஷாலினி ஷோயாவுடன் தான் முதலில் ஜோடி சேர்ந்தேன்.

அதைப்பார்த்து டிடிஎப் வாசன் அண்ணன் ஆளு மேலயே கை வெச்சிட்டியா, எங்க அண்ணனுக்கு துரோகம் செய்றிரா என பயங்கர கமெண்ட் எல்லாம் வந்தது.

நான் சும்மா சமையலில் பேர் ஆனேன், ஆனா வாழ்க்கைல இல்லனு நிறைய சொல்லிட்டேன். டிடிஎப் வாசன் ரசிகர்கள் 4, 5 பேர் மிரட்டினாங்க, ஆனா அது ஒன்னும் பிரச்சனை இல்லை என கூலாக பேசியுள்ளார்.

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியால் குரேஷிக்கு வந்த மிரட்டல்கள்.. கடைசியில் என்ன ஆனது? | Cwc Fame Kureshi About Threats For This Reason

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments