சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, இந்த சீரியலின இன்றைய எபிசோடில், தறுதலையாக சுற்றும் சத்யாவின் பிறந்தநாளுக்கு போக வேண்டாம் என பொறுமையாக முத்து-மீனாவிடம் கூறிவிட்டு செல்கிறார்.
ஆனால் மீனா, சத்யா நீ வரவில்லை என்றால் இதெல்லாம் வேண்டாம் என கூற மனம் மாறி கோவிலுக்கு செல்கிறார்.
அங்கு கூழ் ஊற்றும் போது முத்து அந்த இடத்திற்கு சென்று மீனா மீது கடும் கோபத்தை காட்டிவிட்டு சென்றுவிடுகிறார்.
பின் வீட்டிற்கு குடித்துவிட்டு வருபவர் நான் சொன்னதை நீ கேட்கவில்லை என மன வருத்தத்துடன் பேசுகிறார்.
விஜயா பேச்சு
மீனா-முத்து சண்டையை பார்த்த விஜயாவிடம், மீனா உங்களுக்கு இப்போது சந்தோஷமா என கேட்கிறார்.
அதற்கு விஜயா, சந்தோஷம் தான் ஆனால் இன்னும் எதிர்ப்பார்த்தேன், மீண்டும் வேதாளம் முருங்கமரம் ஏறிவிட்டது. உன்னால் இன்று குடித்திருக்கிறார், இப்போது தான் அவனுக்கு உன்னை பற்றி தெரிந்துள்ளது.
எனக்கு இந்த நேரம் அல்வா சாப்பிட வேண்டும் போல் உள்ளது என குத்திக்காட்டுகிறார். இதோ அந்த புரொமோ,