குட் பேட் அக்லி
ஆதிக் ரவிச்சந்திரன் – அஜித் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளிவந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.
அதுவும் அஜித் வெவ்வேறு தோற்றங்களில் வந்தது எல்லாம் செம மாஸாக இருந்தது. கண்டிப்பாக அந்த காட்சிகள் எல்லாம் திரையரங்கில் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
குட் பேட் அக்லி திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்கள். முதல் முறையாக இந்த தயாரிப்பு நிறுவனத்துடன் அஜித் கைகோர்த்துள்ளார். புஷ்பா 2 படத்தை தொடர்ந்து மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படமும் இதுவே ஆகும்.
பட்ஜெட்
இந்த நிலையில், இப்படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, குட் பேட் அக்லி திரைப்படத்தை ரூ. 250 கோடி பட்ஜெட்டில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
மிகப்பெரிய பட்ஜெட், டீசர் மூலம் அதிகரித்துள்ள எதிர்பார்ப்பு, மேலும் தமிழகத்தில் 1000 திரையரங்கில் வெளியிடுவது, உலகளவில் கிராண்ட் ரிலீஸ் அனைத்தையும் வைத்து பார்த்தால், கண்டிப்பாக இப்படம் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.