அஜித் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்திருக்கும் படம் குட் பேட் அக்லீ. இந்த படம்
வரும் வியாழக்கிழமை, ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
படத்தின் முன்பதிவு தொடங்கி மிக வேகமாக நடைபெற்று வருகிறது. ரசிகர்களுக்காகவே பல மாஸ் காட்சிகள் படத்தில் இடம் பெற்று இருப்பதால் அதை கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
படத்தை கைப்பற்றிய சேனல்
இந்நிலையில் தற்போது குட் பேட் அக்லீ படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது. மிகப்பெரிய தொகைக்கு சன் டிவி படத்தை வாங்கி இருக்கிறதாம்.
அஜித்தின் முந்தைய படமான் விடாமுயற்சி படமும் சன் டிவி தான் வாங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.