கூலி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.
பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்களாம். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திராவில் நடைபெற்று வருகிறது.
உபேந்திரா
இந்த நிலையில், இப்படத்தில் கன்னட திரையுலகில் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் உபேந்திரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை இந்த தகவல் குறித்து படக்குழுவிடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை.
கன்னட திரையுலகில் சூப்பர்ஸ்டாராக இவரை கொண்டாடுகின்றனர். நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் பல திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார்.
மேலும் தமிழில் விஷால் நடிப்பில் வெளிவந்த சத்யம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.