Monday, December 30, 2024
Homeசினிமாகெத்தாக சுற்றிவந்த பிரேம்ஜிக்கு கல்யாணத்திற்கு பிறகு இப்படியொரு நிலைமையா... வைரலாகும் வீடியோ

கெத்தாக சுற்றிவந்த பிரேம்ஜிக்கு கல்யாணத்திற்கு பிறகு இப்படியொரு நிலைமையா… வைரலாகும் வீடியோ


பிரேம்ஜி அமரன்

இளையராஜா எப்படி சினிமாவில் கலக்கினாரோ, அதேபோல் அவரது சகோதரர் கங்கை அமரனும் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் கலக்கி இருந்தார்.

இவரது மகன்கள் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி இருவருமே சினிமாவில் பிஸி தான். இப்போது வெங்கட் பிரபு, விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கி வருகிறார்,

தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முழு வீச்சில் நடக்கிறது. 45 வயது வரை சிங்கிளாக இருந்த பிரேம்ஜிக்கு அண்மையில் இந்து என்பவருடன் திருமணமும் நடந்து முடிந்தது.


தற்போதைய நிலை

இந்து சேலத்தை பூர்வீகமாக கொண்டவர், ஒரு வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். திருமணம் ஆனது முதல் இந்து தனது கணவருடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.

அப்படி அண்மையில் பிரேம்ஜி சமையல் செய்வது போன்ற வீடியோவை வெளியிட்டு, முத்து படத்தில் இடம்பெற்ற, அவரு யாருனு உனக்கு தெரியுமா, ஒரு காலத்துல அவரு எப்படி வாழ்ந்தவருனு தெரியுமா என்ற வசனம் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து நிறைய காமெடி கமெண்டுகள் பதிவிட்டு வருகிறார்கள். 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments