L2: எம்புரான்
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி மலையாள சினிமாவில் இருந்து வெளிவரப்போகும் திரைப்படம் L2: எம்புரான். கடந்த 2019ல் வெளிவந்த லூசிபர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தான் இந்த எம்புரான்.
பிரித்விராஜ் இப்படத்தை இயக்கி நடித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், அபிமன்யூ சிங், சாய் குமார், சுராஜ் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். வருகிற 27ம் தேதி இப்படம் திரையரங்கில் வெளிவரவுள்ளது.
டிரைலர்
இந்த நிலையில், ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த எம்புரான் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளிவந்துள்ளது.
இந்த டிரைலர் பார்த்த பலரும், மலையாள சினிமாவிலிருந்து பக்கா கமர்ஷியலான ஆக்ஷன் திரைப்படம் வெளியாகிறது என்றும், கேஜிஎப் மற்றும் புஷ்பா திரைப்படங்களின் வசூல் சாதனைகளை இப்படம் தட்டித்தூக்க போகிறது என்றும் கூறி வருகிறார்கள்.
இதோ எம்புரான் திரைப்படத்தின் டிரைலர் :