பிக் பாஸ்
பிக் பாஸ் 8ல் முதல் வாரத்தின் இறுதியில் விஜய் சேதுபதி என்ட்ரி கொடுத்த, வீட்டிற்குள் உள்ள அனைத்து போட்டியாளர்களையும் வெளுத்து வாங்கி வருகிறார்.
நேற்று ஒளிபரப்பான எபிசோடில் ஆண்கள் அணி செய்த Prank, அனைவரின் யோசனையும் Comfort சோனில் இருக்கிறது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விஜய் சேதுபதி பேசினார்.
இந்த நிலையில், இன்று வெளிவந்துள்ள முதல் ப்ரோமோவில், பெண்கள் அணியில் உள்ள மூன்று வீக் போட்டியாளர்கள் குறித்து சாச்சனா, ஏன் அதனை பெண்கள் அணியில் கூறவில்லை, ரவிந்தர் இடம் மட்டும் கூறியது ஏன் என்பது குறித்து விஜய் சேதுபதி பேசியதை பார்த்தோம்.
அதிரடியான ப்ரோமோ இதோ
அதை தொடர்ந்து வெளிவந்துள்ள இரண்டாவது ப்ரோமோவில், நாமினேஷனுக்காக தான் இந்த prank என ரவிந்தர் கூறும்போது, பவித்ரா அங்கு தான் இருந்துள்ளார்.
இதனால் அவருக்கு தெரிந்து தான் இந்த விஷயம் நடந்துள்ளது என விஜய் சேதுபதி கூறியதால், பாவித்ரா மாட்டிகொள்கிறார். இதை பெண்கள் அணியிடம் கூறாமல் பவித்ரா விளையாடியது தவறு என தர்ஷிகா தனது கருத்தை முன் வைக்கிறார்.
இதோ அந்த ப்ரோமோ..