ரவீனா தாஹா
இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், அமலாபால், அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ராட்சசன்.
இந்த படத்தில் சின்ன பெண் கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமானவர் நடிகை ரவீனா தாஹா. அப்படத்திற்கு பின் பெரிய பட வாய்ப்பு வரும் என பார்த்தால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
சின்னத்திரை பக்கம் வந்தவர் சன் டிவியின் தங்கம் சீரியலில் நடிக்க தொடங்கினார். அதன்பின் ஜீ தமிழ் தொலைக்காட்சியி பூவே பூச்சூடவா என்ற தொடரில் நடித்தார்.
அப்படியே விஜய் டிவி பக்கம் வந்தவர் மௌன ராகம் 2 சீரியலில் நடித்து வந்தார், பின் விஜய் டிவியின் குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளிலும் கலக்கி வந்தார்.
பிறந்தநாள்
இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் ரவீனா தாஹா தற்போது தனது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
கோவாவில் தனது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கோலாகலமாக கொண்டாடியுள்ளார். இதோ அவர் வெளியிட்ட பதிவு,