Saturday, March 22, 2025
Homeஇலங்கைசட்டபூர்வமாக சேவையில் இருந்து விலகாத 1,600 முப்படை உறுப்பினர்கள் கைது

சட்டபூர்வமாக சேவையில் இருந்து விலகாத 1,600 முப்படை உறுப்பினர்கள் கைது


சட்டபூர்வமாக சேவையில் இருந்து விலகாத முப்படைகளைச் சேர்ந்த 1,600க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தவின் உத்தரவின்படி, சட்டப்பூர்வமாக இராஜினாமா செய்யாமல் பணியில் இருந்து தப்பிச் சென்ற முப்படை உறுப்பினர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் கடந்த பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டன.

அதன்படி, நேற்று (19) வரை பணியில் இருந்து தப்பிச் சென்ற 1,604 முப்படை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 1,444 பேரும், பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 160 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் 1,394 இராணுவ வீரர்கள் உள்ளடங்குவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்டவர்களில் 138 விமானப்படை வீரர்களும் 72 கடற்படை வீரர்களும் அடங்கின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments