சிறகடிக்க ஆசை
விஜய் டிவியின் டிஆர்பி கிங்காக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை சீரியல்.
இன்றைய எபிசோடில் விஜயா, ஸ்ருதியிடம் திட்டி வாங்கிய காட்சியை ரசிகர்கள் அதிகம் ரசிக்கப்போகிறார்கள். அதாவது விஜயா, ஸ்ருதிக்கு வந்த பார்சலை திறந்து அதில் இருந்த HeadPhones எடுத்து மாட்டிக் கொள்கிறார்.
அதைப்பார்த்த ஸ்ருதி, என்ன தான் மாமியாராக இருந்தாலும் உங்களுக்கு ஒரு இடம் உள்ளது, எனது பொருளை யார் என்னை கேட்காமல் எடுத்தாலும் எனக்கு பிடிக்காது என சத்தம் போட விஜயா ஆடிப்போகிறார்.
இன்னொரு பக்கம் முத்து-மீனா சத்யாவிற்காக அவரது கல்லூரி செல்கிறார்கள்.
புரொமோ
சத்யாவிற்காக பேச போய் முத்து-மீனா பேச போய் அது பிரச்சனையில் முடிகிறது. முத்துவை போலீஸ் கைது செய்கிறார்கள், மீனா அவர் எதுவும் தவறு செய்யவில்லை என பெண் போலீசிடம் கதறுகிறார்.
அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.