சிங்கப்பெண்ணே
சன் தொலைக்காட்சியில் படங்கள் ஒளிபரப்பாகிறதோ இல்லையோ சீரியல்கள் அதிகம் ஒளிபரப்பாகும்.
காலை 10 மணிக்கு தொடங்கப்பட்டு தொடர்ந்து இரவு 10 மணி வரை தொடர்கள் ஒளிபரப்பாகும். இடையில் 3 மணி நேரம் ஒரு படம் மட்டும் ஓடும்.
அப்படி சீரியல்களுக்கு பெயர் போன சன் டிவியில் இப்போது சிங்கப்பெண்ணே, கயல், சுந்தரி, வானத்தை போல, மருமகள் போன்ற தொடர்கள் டாப்பில் ஓடிக் கொண்டிருக்கிறது.
புதிய தகவல்
கடந்த 2023ம் சன் டிவியில் தொடங்கப்பட்ட தொடர் தான் சிங்கப்பெண்ணே. இதுவரை 210 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஓளிபரப்பாகி வருகிறது. கிராமத்தில் இருக்கும் ஒரு பெண் நகரத்தில் பயணிக்கும் கதையாக உள்ளது.
தற்போது சிங்கப்பெண்ணே தொடர் குறித்து வந்த தகவல் என்னவென்றால் இந்த தொடர் மறு ஒளிபரப்பாக உள்ளதாம். வரும் நிங்கள் முதல் காலை 10.30 மணிக்கு மீண்டும் ஒளிபரப்பாக இருக்கிறது.