விஜய் தொலைக்காட்சியின் பாக்கியலட்சுமி தொடரில் முக்கிய நாயகியாக நடித்து மக்களிடம் பிரபலமானவர் சுசித்ரா.
இந்த தொடர் மூலம் மிகவும் பிரபலமான இவர் நிறைய விளம்பரங்கள் நடிப்பது, திறப்பு விழாக்களுக்கு செல்வது என பிஸியாக உள்ளார். சீரியலை தாண்டி இவர் படங்களிலும் நடித்துள்ளார்.
புதிய தொடர்
தற்போது நடிகை சுசித்ரா கமிட்டாகியுள்ள புதிய சீரியல் குறித்து தகவல் வந்துள்ளது. சிந்து பைரவி என்ற புதிய தொடரில் பாக்கியலட்சுமி சீரியல் புகழ் சுசித்ரா, தெய்வமகள் சீரியல் பிரபலம் ரேகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்களாம்.
சிப்பிக்குள் முத்து என்ற விஜய் டிவி தொடரில் நடித்த ஜெய் தான் இதில் நாயகனாக நடிக்கிறாராம்.
இவர்கள் இணைந்து நடிக்கும் இந்த தொடர் தமிழில் கிடையாது கன்னடத்தில் வரப்போகிறது. சன் டிவியில் புதியதாக ஒளிபரப்பாக போகும் ஆடுகளம் தொடரின் ரீமேக் தான் இந்த சிந்து பைரவி தொடராம்.