சன் டிவியில் 400 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது மலர் சீரியல். அதில் ப்ரீத்தி ஷர்மா ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இந்த தொடருக்கு சின்னத்திரையில் நல்ல ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது.
விலகிய ப்ரீத்தி
மலர் சீரியலில் இருந்து தற்போது ப்ரீத்தி ஷர்மா வெளியேறிவிட்டார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
அவருக்கு பதிலாக அஸ்வதி தான் மலர் சீரியலில் நடிக்க போகிறார். விஜய் டிவியில் சமீபத்தில் நிறைவடைந்த மோதலும் காதலும் சீரியலில் ஹீரோயினாக நடித்து வந்த அஸ்வதி அடுத்து சன் டிவிக்கு தாவி இருக்கிறார்.
‘அவருக்கு பதில் இவர்’ என வரும் நாட்களில் மலர் சீரியலில் மாற்றம் வர இருப்பது உறுதியாகி இருக்கிறது.