புஷ்பா படம்
சினிமாவில் படங்கள் இயக்கும் இயக்குனர்கள் இப்போது ஒரு விஷயத்தை முக்கியமாக தங்களது படங்களில் வைக்க முயற்சி செய்கிறார்கள்.
அதுஎன்ன செம டிரெண்டான ஒரு பாடல், சில படங்களில் க்ளிக் ஆனாலும் பல இடங்களிலும் இருந்து சுவடு இல்லாமல் போனது.
சமந்தா
அப்படி நடிகை சமந்தா நடனம் ஆட பட்டிதொட்டி எங்கும் கலக்கிய பாடலாக அமைந்தது ஊ சொல்றியா ஊஊ சொல்றியா. தெலுங்கு சினிமா அல்லு அர்ஜுன்-ராஷ்மிகா ஜோடியாக நடிக்க புஷ்பா படம் கடந்த சில வருடங்களுக்கு முன் வெளியானது.
படத்தின் கதை பக்கா மாஸாக இருந்தது, அதனாலேயே படம் ஓடியது என்றாலும் இந்த படத்தில் ஒரு பாடலில் நடிகை சமந்தா இடம்பெற்ற பாடலும் ஒரு காரணம்.
செம அதிரடி ஹிட்டான இந்த பாடலில் நடனம் ஆட முதலில் வேறொரு நடிகைக்கு தான் வாய்ப்பு சென்றுள்ளது.
அந்த சிறப்புப் பாடலில் நடனமாட சமந்தாவுக்கு முன்பு நடிகை கெட்டிகா ஷர்மாவுக்கு தான் வாய்ப்பு சென்றுள்ளது, ஆனால் அந்த நேரத்தில் அவரால் கமிட்டாக முடியவில்லை.
தற்போது கெட்டிகா ஷர்மா ராபின்ஹுட் படத்தில் அதி தா சர்ப்ரைஸ் என்ற சிறப்பு பாடலில் நடனம் ஆடியுள்ளார்.