நயன்தாரா
தமிழ் சினிமா மட்டுமின்றி தற்போது இந்தியளவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் நடிகை நயன்தாரா.
இவர் நடிப்பில் தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி, டாக்சிக் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
இதில் டாக்சிக் திரைப்படத்தில் கேஜிஎப் ஹீரோ யாஷ் உடன் இணைந்து நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் முக்கிய நாயகர்களில் ஒருவர் கவின். இவருடைய அடுத்த படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தகவல் வெளிவந்தது. இப்படத்தை லலித் குமார் தயாரிக்கிறாராம்.
முதலில் இப்படம் ட்ராப் ஆகும் சூழ்நிலைக்கு சென்று பின் அதிலிருந்து திரும்பியுள்ளது. காரணம் நயன்தாரா தனது சம்பளம் ரூ. 15 கோடி என கூறியது தானாம்.
சம்பளத்தை குறைத்துக்கொண்ட நயன்தாரா
முதலில் தனது சம்பளம் ரூ. 15 கோடி என கூறியவுடன் தயாரிப்பாளர் அது சரியாக இருக்காது, ரூ. 10 கோடி என்றால் ஓகே என கூறியுள்ளார். ஆனால் முதலில் இதற்கு சரி என நயன்தாரா கூறவில்லையாம்.
திடீரென ஒரு நாள் நயன்தாரா தரப்பில் இருந்து தயாரிப்பாளரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ரூ. 10 கோடி சம்பளம் ஓகே என கூறியபின் தான் இப்படம் துவங்கியுள்ளதாக பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.