குக் வித் கோமாளி 5
குக் வித் கோமாளி விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன் வெற்றிகரமாக புதுமையான கான்செப்டில் தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி.
சமையல் ப்ளஸ் நிறைய கலாட்டா என போட்டியாளர் அவருக்கு ஜோடியாக கோமாளி என தொடங்கப்பட இந்த நிகழ்ச்சி இப்போது பல மொழிகளிலும் ஒளிபரப்பாகிறது.
குக் வித் கோமாளி 5வது சீசன் இப்போது ஒளிபரப்பாக தொடங்கப்பட்டு இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.
மணிமேகலை
இந்த நிலையில் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் மணிமேகலை தற்போது இதில் இருந்து வெளியேறியுள்ளார்.
ஆரம்பத்தில் இருந்து எனது 100% உழைப்பை போட்டு வருகிறேன், 2019ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் அப்படிதான். ஆனால் எல்லாவற்றையும் விட சுயமரியாதை முக்கியம், இதனால் CWC 5ல் இருந்து வெளியேறுகிறேன்.
இந்த சீசன் மொத்தமாக ஒரு பெண் தொகுப்பாளினி, எப்போதும் தொகுப்பாளர்களின் பணியில் தலையிட்டுகொண்டே உள்ளார், அவர் ஒரு போட்டியாளர் என்பதை மறந்துவிட்டார்.
எப்போதும் எனது வேலையில் தொந்தரவு செய்துகொண்டு எனது வேலையை சரியாக செய்யவிடுவதில்லை. இதற்கு முன் இருந்து சீசன்களை முற்றிலும் தாண்டி இது ஆதிக்கம் செலுத்தும் சீசனாக உள்ளது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி அதன் தன்மையை இழந்துவிட்டது என பெரிய பதிவு போட்டுள்ளார்.