குஷ்பு
நடிகை குஷ்பு, தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய முன்னணி நடிகைகளில் ஒருவர்.
சினிமாவை தாண்டி நிறைய விஷயங்கள் மூலம் டிரண்ட் செட்டராக இருந்துள்ளார். குஷ்பு இட்லி தொடங்கி நிறைய விஷயங்கள் அவரது பெயரில் பேமஸ் ஆனது.
சினிமா, அரசியல் என இரண்டிலும் கெத்தாக வலம்வரும் குஷ்பு தனது இன்ஸ்டாவில் சமீபகாலமாக நிறைய சமையல் வீடியோக்களை வெளியிடுகிறார், டிப்ஸ் கூறுகிறார்.
Skin Care
அப்படி நடிகை குஷ்பு சமீபத்தில் தனது சோசியல் மீடியாவில், கேரட் துருவலோடு, தேங்காய் எண்ணெய் சேர்த்து கொதிக்கவைத்த எண்ணெய் செய்முறையை பகிர்ந்திருந்தார்.
அது ஆன்டிஏஜிங் தன்மை கொண்டதாகவும் சரும நிறத்தை அதிகரிப்பதாகவும் சொல்லியிருந்தார். அவரின் இந்த ஸ்கின் கேர் டிப்ஸ் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.