Monday, March 31, 2025
Homeஇலங்கைசாமர சம்பத் தசநாயக்கவுக்கு விளக்கமறியல் – Oruvan.com

சாமர சம்பத் தசநாயக்கவுக்கு விளக்கமறியல் – Oruvan.com


நீதிமன்றில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு இரண்டு வழக்குகளில் பிணை வழங்கப்பட்டுள்ள போதிலும், மற்றுமொரு வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, சாமர சம்பத் தசநாயக்கவை ஏப்ரல் மாதம்  முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த போது அரச வங்கியொன்றிலிருந்து நிதியை கோரிய போது அதனை வழங்குவதற்கு வங்கி முகாமையாளர் மறுத்ததால் மாகாண சபை குறித்த வங்கியில் நடத்திச்சென்ற அனைத்து நிலையான வங்கிக்கணக்குகளையும் நீக்கிக்கொண்டதன் மூலம் அரசாங்கத்திற்கு 23 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவர் விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் தசநாயக்க முன்னிலையான போது அவர்  03 குற்றச்சாட்டுகளின் கீழ்  கைது செய்யப்பட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments