அமரன்
சின்னத்திரையில் இருந்து தமிழ் சினிமாவில் சாதித்த நடிகர்களில் இப்போது முக்கியமானவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவர் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சாய் பல்லவியுடன் இணைந்து அமரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். வரும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது.
இந்த நிலையில் அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக நடந்தது. அதில் இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் என்றாலே ஜாலி தான், அதாவது அவரிடம் மைக்கை பிடித்து பேச வேண்டும் என்று சொன்னால் போதுமே. மிகவும் கலகலப்பாக தான் சொல்ல வந்த விஷயத்தை கூறி கேட்போரையும் ரசிக்க வைப்பார்.
அப்படி அமரன் பட இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசும்போது, பிரேமம் படத்தை பார்த்துவிட்டு அந்த மலர் டீச்சர் மயக்கத்தில் சாய் பல்லவிக்கு ஃபோன் செய்து சாய் பல்லவி நல்லா நடிச்சிருக்கீங்க என்றேன்.
உடனே அவர் அண்ணா தேங்க்யூண்ணா என்றார், நான் உடனே ஷாக் ஆகிட்டேன். அண்ணான்னு மட்டும் கூப்பிடாத, அந்த படத்தில் வர மாதிரி என்னை மறந்து கூட போயிடுன்னு சொன்னேன் என கலகலப்பாக கூறியுள்ளார்.