நடிகை ஊர்வசி
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த பல நடிகைகள் இப்போதும் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிஸியாக இருக்கிறார்கள்.
அப்படி இப்போதும் மிகவும் பிஸியாக படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை ஊர்வசி. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் மறைந்த தனது அக்கா நடிகை கல்பனா குறித்து சோகமான விஷயத்தை பகிர்ந்துள்ளார்.
நடிகையின் பேட்டி
அதில் அவர், எனது அக்கா கல்பனாவிற்கு வந்த பட வாய்ப்புகளில் நான் நடித்தேன், இதனால் அவர் என்மீது கோபப்பட்டதே கிடையாது, மாறாக வளர்ச்சியை பார்த்து மகிழ்ந்தார்.
மலையாள மற்றும் தமிழ் சினிமா இரண்டுமே அக்காவுக்கு சரியான மரியாதையே அளிக்கவில்லை. இதனால் நான் ஆரம்பத்தில் இருந்தே பட விழாக்களுக்கு செல்வதை தவிர்த்து வந்தேன்.
அக்கா என்னைவிட திறமைசாலி, அவருக்கு பல விருதுகள் கிடைத்திருக்க வேண்டும்.
அக்காவுடன் நான் சென்றால் எனக்கு முக்கியத்துவம் கொடுத்து விடுவார்கள் என்று நினைத்து பட விழாக்களில் கலந்துகொள்ளாமல் தவிர்த்து வந்தேன் என சோகமாக தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.