சிறகடிக்க ஆசை
சின்னத்திரையில் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. TRP-யிலும் டாப் சீரியலாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் தம்பி தவறான பாதையில் சிட்டி என்பவருடன் பயணித்து கொண்டு இருப்பதால், முத்து கடும் கோபத்தில் இருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை கூட வந்தது.
அடுத்து நடக்கப்போவது இதுதான்
இதில் மீனாவின் தம்பியின் கையை கூட முத்து உடைத்தார்.
இப்படியிருக்க மீனாவின் தம்பிக்கு பிறந்தநாள், அதனால் கோவிலுக்கு சென்று தம்பி பிறந்தநாளில் பங்கேற்க வேண்டும் என ஆசையுடன் முத்துவிடம் வந்து மீனா கேட்கிறார். ஆனால் நீ அங்கு போகவே கூடாது என கண்டிப்பாக முத்து கூறிவிடுகிறார்.
ஆனால், முத்து சொன்னதை மீறி தனது தம்பியின் பிறந்தநாள் விழாவிற்கு மீனா சென்றுவிடுகிறார். மீனாவை தேடி வீட்டிற்கு வரும் முத்துவிடம், மீனா வீட்டில் இல்லை அவளுடைய தம்பியின் பிறந்தநாள் விழாவிற்கு சென்று இருக்கிறாள் என விஜயா கூறிவிடுகிறார்.
இதனால் கடும் கோபத்திற்கும் ஆளாகும் முத்து, உடனடியாக மீனாவை சந்திக்க கோவிலுக்கு செல்கிறார். இதன் பின் என்ன நடக்கப்போகிறது என்று வரும் வாரம் எபிசோடில் பொறுத்திருந்து பார்ப்போம்.