கோமதி ப்ரியா
சின்னத்திரையில் வெற்றிநடை போட்டு வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை கோமதி ப்ரியா. மீனா என்கிற கதாபாத்திரத்தின் மூலம் இன்று தமிழகத்தில் உள்ள அனைவரின் வீட்டிலும் ஒரு நபராக கோமதி ப்ரியா பார்க்கப்படுகிறார்.
சிறகடிக்க ஆசை சீரியலுக்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான வேலைக்காரன் சீரியலில் கதாநாயகியாக கோமதி ப்ரியா நடித்துள்ளார். ஆனால், அந்த சீரியலை விட சிறகடிக்க ஆசை இவருக்கு மிகப்பெரிய புகழை கொடுத்துள்ளது.
மேலும் வெற்றிமாறனின் அசுரன் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தும், கால்ஷீட் இல்லாத காரணத்தினால் இவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது என சமீபத்தில் தகவல் வெளிவந்தது.
அசுரன் பட வாய்ப்பை இவர் தவறவிட்டு இருந்தாலும், விரைவில் வெள்ளித்திரையில் கோமதி ப்ரியாவை பார்க்கலாம் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
சம்பளம்
இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்க, ஒரு நாளைக்கு நடிகை கோமதி ப்ரியா ரூ. 12,000 ஆயிரம் சம்பளம் வாங்கி வருகிறாராம். இவருடைய மட்டுமின்றி மற்றவர்களின் சம்பள விவரமும் வெளியாகியுள்ளது.
இதோ அந்த விவரம் :
-
சுந்தர்ராஜன் – 8,000 -
நடிகை அணிலா – 8,000 -
வெற்றி வசந்த் – 12,000 -
நடிகர் ஸ்ரீதேவா – 6,000 - நடிகை சல்மா – 6,000
- யோகேஷ் – 5,000
- ப்ரீத்தா ரெட்டி – 5,000