மாட்டிகொண்ட மனோஜ் விஜயா
சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது சின்னத்திரையில் டாப்பில் இருக்கிறது. TRP ரேட்டிங்கில் பட்டையை கிளப்பி வரும் இந்த சீரியலில் தற்போது தங்க நகை எப்படி கவரிங் நகையாக மாறியது என்பதை பற்றி தான் விறுவிறுப்பான காட்சிகள் நகர்கிறது.
இதில் முத்துவின் தந்திரத்தால், தங்க நகையை கவரிங் நகையாக மாற்றியது விஜயா மற்றும் மனோஜ் என குடும்பத்திற்கு தெரிய வந்துவிட்டது. இதனால் கோபமடைந்த அண்ணாமலை மனோஜை வெளுத்து வாங்கிவிட்டார்.
இனிமேல் தனது மனைவி விஜயாவிடம் கூட பேசப்போவது இல்லை, உன் கையால் தண்ணி கூட வாங்கி குடிக்க மாட்டேன் என கூறிவிட்டார். மேலும் மீனாவிடம் நீ மன்னிப்பு கேட்க வேண்டும் என விஜயாவிடம் கூறிவிட்டார் அண்ணாமலை.
முத்து சொன்ன ஐடியா
இந்த நிலையில், இதற்கு முன் ஏமாற்றிய ரூ. 27 லட்சத்துடன் சேர்த்து இந்த நகையை ஏமாற்றியதற்கான ரூ. 4 லட்சத்தையும் மனோஜ் திருப்பி தரவேண்டும், அதுவும் மாசம் ரூ. 50 ஆயிரம் என்கிற கணக்கில் இதனை மனோஜ் தரவேண்டும் என முத்து கூறிவிட்டார். இவை தான் அடுத்த வாரம் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கவிருக்கிறது என ப்ரோமோ வெளியாகியுள்ளது.