சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, விஜய் தொலைக்காட்சியின் தொடர்களில் டிஆர்பியில் டாப்பில் இருக்கும் ஒரு தொடர்.
முத்து-மீனா கதாபாத்திரத்தை நோக்கியே இந்த தொடரின் கதை நகர்ந்து வருகிறது, ரசிகர்களின் பேவரெட் ஜோடியாகவும் இவர்கள் உள்ளார்கள்.
அண்மையில் நடந்த விஜய் டெலிவிருது விழாவில் சிறந்த நாயகன், சிறந்த நாயகிக்கான விருதினை முத்து-மீனா கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் பெற்றனர்.
ரசிகர்களும் இந்த ஜோடி விருது பெற்றதற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
வைரல் போட்டோ
மீனா என்கிற கோமதி ப்ரியா விருது வாங்கிய புகைப்படம் வைரலாக கூடவே அவரது பழைய புகைப்படம் ஒன்று வைரலாகிறது.
அதாவது அவர் பல வருடங்களுக்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படத்தையும் இப்போது உள்ள அவரது போட்டோவையும் வைத்து வைரலாகிறது.
அவரது பழைய லுக்கிற்கும் இப்போதும் நிறைய வித்தியாசம் தெரிகிறது.
கோமதி ப்ரியாவின் வளர்ச்சி இன்னும் மேலும் உயர வேண்டும் என ரசிகர்கள் மனதார வாழ்த்து கூறி வருகின்றனர்.