பிரபல நடிகை
சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.
அப்படி தான் பிரபலங்களின் பட பாடல்களில் வரும் சின்ன நடனங்கள் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமாகிவிடும். ஒரு பாடலில் வரும் சின்ன போஷன் டிரண்டாகும் ரசிகர்களும் அதை வைத்து ரீல்ஸ் வீடியோ வெளியிடுவார்கள்.
அப்படி தமிழ், ஹிந்தி படங்களில் நடித்துவரும் இந்த நடிகை இடம்பெற்ற பாடல்கள் கடந்த சில மாதங்களாக டிரண்டிங்கில் இருந்து வருகிறது. சூப்பர் ஸ்டாருடன் ஒரு பாடல் நடனம், பேய் படத்தில் அவர் ஆடிய நடனம் என செம ஹிட் தான்.
யார் இவர்
மேலே கூறப்பட்ட சில ஹின்ட்களை படித்ததும் அவர் யார் என தெரிந்திருக்கும், ஆமாம் அவரே தான். காவாலா, அச்சோ அச்சோ அச்சச்சோ போன்ற பாடல்களில் நடனம் ஆடி ரசிகர்களை மயக்கிய நடிகை தமன்னா தான் இது.
சிறுவயது எடுக்கப்பட்ட அவரது புகைப்படம் தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.