நயன்தாரா
தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இடத்தை பிடிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அப்படி எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த உழைப்பின் மூலம் முன்னேறி இப்போது லேடி சூப்பர் ஸ்டாராக இந்திய சினிமா கொண்டாடும் நாயகியாக வலம் வருகிறார் நயன்தாரா.
20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் 75க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.
ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதன் பின், பில்லா, ஆரம்பம் என தொடர்ந்து படங்களில் நடித்து பிரபலமானார்.
இயக்குனர் பேட்டி
இந்நிலையில், நயன்தாரா குறித்து இயக்குனர் விஷ்ணுவர்தன் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், “பில்லா படத்தை நாங்கள் தொடங்கும்போது சில தனிப்பட்ட காரணங்களுக்காக நயன்தாரா நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தார்.
அதன் பின், மீண்டும் அவர் நடிக்க முடிவு செய்திருந்தார் என தெரிந்த உடன் அவரை சந்தித்து கதை சொன்னோம். அவரும் நடிக்க ஒத்துக்கொண்டார்.
நயன்தாரா மிக தைரியமான ஒரு பெண். சினிமாவில் அவ்வப்போது சில பிரச்சனைகளை சந்தித்து விலகி விடுவார். ஆனால், மீண்டும் ஒரு தரமான கம்பேக் கொடுத்து மீண்டு வந்து விடுவார். பில்லா படத்தின்போது தனது வெயிட்டை குறைத்திருந்தார்.
அந்த விஷயம் கேரக்டருக்கு அழகை சேர்த்தது. பில்லா படத்தில் நயன்தாராவின் ரோல் பெரிதாக வரவேற்பு பெற்றதற்கு முக்கிய காரணம் நயன் குணமும் அந்த படத்தின் கேரக்டரும் ஒன்றாக இருந்ததால் தான். அது போன்று தான் ஆரம்பம் படத்திலும்” என்று கூறியுள்ளார்.