சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் சமீபத்தில் தான் தனது அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்தார். இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.
இப்படத்தை முடித்த கையோடு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் எஸ்.கே. 23 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த சமயத்தில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
புதிய கூட்டணி
அதன்படி, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தான் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம். இப்படத்திற்கான பேச்சு வார்த்தை நடந்து வரும் நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர், நடிகர் மற்றும் அரசியல்வாதியுமான சீமானை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்களாம்.
இதற்காக சீமான் அவர்களை படக்குழு முதலில் அணுகி பேசியுள்ளனர். இதன்பின் சீமானின் வீட்டிற்கு சென்று அவரை நேரில் சந்தித்து பேசியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இப்படத்திற்காக சீமானை நேரில் சந்தித்தது போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.