விஜய் டிவி
ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் தொலைக்காட்சி இப்போது சன் டிவிக்கு நிகராக மிகவும் ஹிட்டான தொடர்களை ஒளிபரப்பி வருகிறது.
சிறகடிக்க ஆசை தொடங்கி பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், மகாநதி என நிறைய ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
ஒவ்வொரு தொடருமே ஒவ்வொரு கதைக்களத்தை கொண்டது, ஆனால் சிறகடிக்க ஆசை தொடருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ரசிகர்களாக உள்ளார்கள்.
புதிய என்ட்ரி
இந்த நிலையில் விஜய்யில் ஒளிபரப்பாகும் பொன்னி சீரியலில் ஒரு பிரபலம் வெளியேற இரண்டு பிரபலம் உள்ளே வந்துள்ளனர்.
அதாவது அண்மையில் ஜெயலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்துவந்த சிந்துஜா உடல்நிலை காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார்.
இப்போது அந்த கதாபாத்திரத்தில் ரீ‘ஹானா நடிக்க தொடங்கியுள்ளார். இப்போது மேலும் கார்த்திக் என்ற புதிய கதாபாத்திரத்தில் நடிக்க அசார் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.