சூப்பர் சிங்கர்
விஜய் தொலைக்காட்சியில் நிறைய ரியாலிட்டி ஷோக்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
அதில் ஒன்று தான் சூப்பர் சிங்கர், தமிழ் சினிமாவில் இப்போது கலக்கிவரும் நிறைய இளம் பாடகர்களை இந்த மேடை தான் அறிமுகப்படுத்தியுள்ளது.
நிறைய திறமையான பாடகர்களை சினிமாவிற்கு கொடுத்த பெருமை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு உள்ளது.
இந்த பாடல் நிகழ்ச்சியின் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் தான் பாடகி நித்யஸ்ரீ. தற்போது இவரது சமீபத்திய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இன்ஸ்டா பதிவு
1.6 மில்லியன் போலாவர்களை கொண்ட பாடகி நித்யஸ்ரீ அண்மையில் தனது நீளமான தலைமுடியை கட் செய்து Short Hair லுக்கிற்கு மாறியுள்ளார்.
அதோடு தான் கட் செய்த முடியை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்துள்ளார்.
அதோடு தனது நியூ லுக் புகைப்படத்தை அவர் வெளியிட ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.