சூரரைப் போற்று
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த 2020ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சூரரைப் போற்று. இப்படம் கொரோனா காலகட்டத்தில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளிவந்தது.
ஆனாலும் கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து சூரரைப் போற்று திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்தனர்.
இந்தி ரீமேக் ‘சர்ஃபிரா’
சூர்யாவிற்கு பதிலாக இப்படத்தில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடித்திருந்தார். சர்ஃபிரா என இப்படத்திற்கு இந்தியில் தலைப்பிடப்பட்டது. மேலும் இப்படத்தையும் சுதா கொங்கரா தான் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி திரையரங்கில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் மோசமான வரவேற்பை பெற்றுள்ளது. பல திரையரங்கங்களில் யாரும் பட பார்க்க வராத காரணத்தினால் பல காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்படம் முதல் நாள் ரூ. 2 கோடியும், இரண்டாவது நாளில் ரூ. 4 கோடியும் வசூல் செய்துள்ளதாம்.
சூரரைப் போற்று இந்தி ரீமேக் திரைப்படத்திற்கு இப்படியொரு மோசமான வரவேற்பு கிடைக்கும் என படக்குழு எதிர்பார்க்கவில்லையாம். இதனால் இப்படத்தின் வசூல் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்கின்றனர்.