சூரி
நகைச்சுவை நடிகராக தனது திரை பயணத்தை துவங்கி இன்று மாஸ் ஹீரோவாக கலக்கிக்கொண்டிருக்கிறார் சூரி. விடுதலை முதல் பாகத்தின் வெற்றிக்கு பின் சூரி நடிப்பில் வெளிவந்த கருடன் படமும் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. அடுத்ததாக விடுதலை இரண்டாம் பாகம் வெளிவரவுள்ளது.
சூரி, இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். விலங்கு வெப் தொடர் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் தான் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ். இப்படத்தில் லார்க் ஸ்டுடியோஸ் தயாரிக்கவுள்ளார்.
சூரியுடன் இணையும் ஐஸ்வர்யா லட்சுமி
இந்த நிலையில், இப்படத்தில் சூரியுடன் இணைந்து நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மணி ரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.
இவர் தமிழில் வெளிவந்த ஆக்ஷன் படத்தின் மூலம் அறிமுகமானார். பின் தனுஷுடன் இணைந்து ஜகமே தந்திரம், விஷ்ணு விஷாலுடன் கட்டா குஸ்தி ஆகிய படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.