சூர்யா – ஜோதிகா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் மும்பையில் தற்போது வசித்து வருகிறார். பிள்ளைகளின் படிப்பிற்காக தான் அங்கு சென்றுள்ளதாக ஜோதிகா பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
மும்பையில் குடியேறிய ஜெயம் ரவி
இந்த நிலையில், சூர்யா – ஜோதிகாவை தொடர்ந்து தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் ஜெயம் ரவியும் மும்பைக்கு குடியேறியுள்ளாராம்.
ஜெயம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இன்று தனக்கென்று தமிழ் சினிமாவில் தனி இடத்தை பிடித்திருக்கும் ஜெயம் ரவி மும்பைக்கு குடியேறியுள்ளதாகவும், அங்கு தான் தன்னுடைய படங்களின் கதைகளை கூட கேட்டு வருகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர்கள் ஜெயம் ரவியிடம் கதை சொல்லவேண்டும் என்றாலும் மும்பை தான் செல்லவேண்டுமாம். இந்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயம் ரவி நடிப்பில் பிரதர், காதலிக்க நேரமில்லை போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் பிரதர் திரைப்படம் வருகிற அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளனர்.