ஜீ தமிழ்
சினிமாவில் பணிபுரியும் எல்லா கலைஞர்களுக்கும் ஊக்குவிக்கும் வகையில் விருதுகள் தேவைப்படுகிறது.
சன் மற்றும் விஜய் தொலைக்காட்சியில் வருடா வருடம் நடக்கும் சின்னத்திரை விருதுகள் போல் ஜீ தமிழிலும் நடந்து வருகிறது. அண்மையில் 2024ம் ஆண்டிற்கான ஜீ தமிழ் குடும்ப விருதுகள் பற்றிய முன்னோட்டங்கள் தான் அதிகம் வெளியாகி வந்தன.
விருது விழா
இந்த ஜீ தமிழ் குடும்ப விருதுகள் நாளை அக்டோபர் 17, நடப்பதாக இருந்தது.
ஆனால் சென்னையில் ஏற்பட்ட மழை பாதிப்பு காரணமாக தற்போது விருது விழா அக்டோபர் 18ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 2 மணியளவில், ஜீ தமிழ் குடும்ப விருதுகள் விழா நடக்க இருக்கிறதாம்.