அன்ஷிதா
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு தொடர் செல்லம்மா.
அர்னவ் மற்றும் அன்ஷிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த தொடர் 2024, செப்டம்பர் மாதம் தான் முடிவுக்கு வந்தது. மொத்தமாக இந்த தொடர் 726 எபிசோடுகள் ஒளிபரப்பாகியுள்ளது.
இந்த தொடரில் நாயகியாக நடித்துவந்த அன்ஷிதா குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் கோமாளியாக பங்குபெற்று வந்தார், தற்போது அந்த ஷோவும் முடிவுக்கு வந்துவிட்டது.
ரொமான்டிக் போட்டோ
இந்த நிலையில் நடிகை அன்ஷிதா பிக்பாஸ் 8வது சீசனில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் அன்ஷிதா ஒருவருடன் கை கோர்த்து இருக்கும் ஒரு அழகான புகைப்படத்தை பதிவிட்டு புயலாலும் கூட நமது உறவை அசைக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.
அன்ஷிதா யாருடனோ ரொமான்ஸ் செய்யும் போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டிருந்தது அவர் சீரியல் நடிகர் அர்னவாக கூட இருக்கலாம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.