ராயன் படம்
சினிமாவில் ஒரு துறையில் நுழைந்தால் அதில் மட்டுமே பிரபலங்கள் இருப்பது இல்லை.
மற்ற துறைகளிலும் தங்களது கவனத்தை செலுத்துகிறார்கள். அப்படி தனுஷ் நடிகராக களமிறங்கி, பாடகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு வந்தவர் இயக்குனராகவும் சாதனை செய்து வருகிறார்.
அவரது இயக்கத்திலும், நடிப்பிலும் தனுஷின் 50வது படம் என்ற பெருமையுடன் ராயன் படம் வெளியாகியுள்ளது.
படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற நாளுக்கு நாள் வசூலிலும் மாஸ் காட்டி வருகிறது.
உறவினர்
இந்த படத்தில் தனுஷ், தன்னை சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய அண்ணன் செல்வராகவனை வைத்து படம் இயக்கியுள்ளார்.
அவரைத் தாண்டி தனுஷ் தனது சகோதரி கார்த்திகாவின் கணவர் கார்த்திக் காவல் துறை அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார்.
தனது கணவர் நடிப்பை கண்டு மிகவும் பெருமை கொள்வதாக இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.