ரித்திகா சிங்
குத்துச்சண்டை வீராங்கனையாக இறுதிச்சுற்று படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங்.
அறிமுக நடிகையாக இருந்தாலும் முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.
தெலுங்கிலும் இப்பட ரீமேக்கின் மூலம் அந்த மொழியிலும் அறிமுகமானவர், பின் தமிழில் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே என நடித்தார்.
தற்போது ரஜினியின் வேட்டையன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
ஒர்க் அவுட்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என நடித்துவரும் ரித்திகா சிங் இன்ஸ்டாவில் எப்போது ஆக்டீவாக இருக்கக் கூடியவர். இவர் தற்போது டைட்டான உடையில் பல்டி அடிக்கும் வீடியோவை வெளியிட அதற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.