ஸ்வேதா மோகன்
வெள்ளித்திரையில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகிகளில் ஒருவர் ஸ்வேதா மோகன். இவர் பிரபல பின்னணி பாடகி சுஜிதா மோகனின் மகள் ஆவார்.
இவர் 1995ஆம் ஆண்டு வெளிவந்த இந்திரா படத்தின் மூலம் பின்னணி பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நீ பார்த்தா விழிகள், என்ன சொல்லா, இன்னும் கொஞ்ச நேரம் உள்ளிட்ட பல பாடல்களை பாடியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 5000க்கும் மேற்பட்ட பாடல்களை ஸ்வேதா மோகன் இதுவரை பாடியுள்ளாராம். பின்னணி பாடகியாக இருக்கும் ஸ்வேதா மோகன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர்.
கலக்கல் நடனம்
இந்த நிலையில், சமீபத்தில் வைரலாகி கொண்டிருக்கும் ‘நீ பேசலன’ என்கிற பாடலுக்கு தனது ஜின் ஜிம் ட்ரைனர் உடன் இணைந்து நடனமாடிய வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்வேதா மோகன் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..