கஷாலா
தெலுங்கு சினிமாவில் 2001ம் ஆண்டு வெளியான புதிய படம் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் நடிகை கஷாலா.
தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்து வந்த கஷாலா 2002ம் ஆண்டு யூனிவர்சிட்டி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
பின் சத்யராஜ்-சிபிராஜ் நடித்த ஜோர் படத்தில் நடித்தவர் ஜீவாவின் ராம் படத்தில் நடித்தார். 2005ம் ஆண்டு வெளியான இப்படம் கஷாலாவுக்கு பெரிய ரீச் கொடுத்தது.
அடுத்தடுத்து தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வந்தார். 2011ம் ஆண்டு கடைசியாக தெலுங்கு படத்தில் நடித்தவர் அதன்பிறகு காணவில்லை.
லேட்டஸ்ட் க்ளிக்
கஷாலா 2016ம் ஆண்டு ராஷா கான் என்பவரை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆனார். இந்த நிலையில் நடிகை கஷாலாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.