அண்ணா சீரியல்
ஜீ தமிழில் வெற்றிகரமாக நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
மிர்ச்சி செந்தில்-நித்யா ராம் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துவரும் இந்த தொடர் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது.
துர்கா சரவணன் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் 400 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அடுத்தடுத்து விறுவிறுப்பான கதைக்களத்தால் தொடர் டிஆர்பியில் முன்னேறி வருகிறது.
புது என்ட்ரி
அடுத்தடுத்து அண்ணா தொடரில் சிலர் வெளியேற பலர் உள்ளே புதிய என்ட்ரி கொடுத்து வருகின்றனர். தற்போது அண்ணா தொடரில் நடிகை அக்ஷாரா புதிய என்ட்ரி கொடுத்துள்ளார்.
ஆனால் இவர் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற விவரம் எல்லாம் தெரியவில்லை.