ஜீ தமிழ்
வெள்ளித்திரையில் அன்றாடம் படங்களின் தகவல்கள் தினமும் வருகிறதோ இல்லையோ சின்னத்திரை பற்றி தினமும் ஏதாவது ஓரு தகவல் வந்துவிடுகிறது.
வியாழக்கிழமை என்றால் கடந்த வாரம் ஒளிபரப்பான தொடர்களின் டிஆர்பி தகவல் வந்துவிடும், வெள்ளி, சனி என்றால் அடுத்த வாரம் என்ன கதைக்களம் ஒளிபரப்பாக உள்ளது என்ற புரொமோ வெளியாகிவிடும்.
அப்படி இன்று ஒரு புதிய சீரியலின் தகவல் வந்துள்ளது.
புதிய சீரியல்
ஜீ தமிழில் தொடர்ந்து பழைய சீரியல் முடிவுக்கு வர புதிய தொடர்கள் களமிறங்கி வருகிறது. ராமன் தேடிய சீதை என்ற தொடரில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாக தொடங்கியுள்ள நிலையில் ஒரு ரீமேக் தொடரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது அண்ணா, இதயம் சீரியல்களை தயாரிக்கும் ராஜம்மாள் கிரியேஷன் ஒரு புதிய தொடரை தயாரிக்கிறார்களாம். அது ஜீ கேரளம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Mizhirandilum என்ற சீரியல் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளதாம்.
மற்றபடி யார் யார் நடிக்கிறார்கள், இயக்குனர் என எந்த விவரமும் இல்லை.