வீரா சீரியல்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று வீரா. இந்த சீரியலில் வைஷ்ணவி அருள்மொழி மற்றும் அருண் ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
மேலும் பசங்க படத்தில் நடித்த சிவகுமார் மற்றும் சின்னத்திரையிலும் முக்கிய நடிகையாக இருக்கும் லட்சுமி ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகின்றனர்.
அபிராமியின் என்ட்ரி
2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த சீரியல் துவங்கிய நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில், இந்த சீரியலில் கதாநாயகியின் தோழியாக நடிகை அபிராமி என்ட்ரி கொடுத்துள்ளார். அதற்கான ப்ரோமோ வீடியோவை தற்போது ஜீ தமிழ் வெளியிட்டுள்ளது.
வீரா சீரியலின் தற்போதைய கதைப்படி, வீராவிற்கு திருமணம் நடைபெறவுள்ளது. இந்த திருமணத்திற்கு வீராவின் தோழியாக வருகை தந்துள்ளார் நடிகை அபிராமி.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ..
விஜய் தொலைக்காட்சியின் பிரமாண்ட நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் நடிகை அபிராமி.
அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடிகை அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் இவருக்கு திரையுலகில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்து. படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.